0 திருப்பூர் மாவட்ட கமிட்டி கூட்டம் - 26.01.2016

26.01.2016 அன்று மாலை ஒருங்கிணைப்பாளார் சுந்தரபாண்டியன் அவர்கள்
தலைமையில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அனைவரும் குடியரசு தின வாழ்த்துகள் தெரிவித்தனர்....
கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்.

1. அவரவர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர் பெயர்களை சேர்க்க மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்துவது.

2.திருப்பூர் மாவட்டத்திற்காக தனியாக இணையதளம் உருவாக்கிய
அருணேஷ்வரன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டுகளை
மாவட்ட  கமிட்டி தெரிவித்துக்கொள்கிறது.

3.சர்ச்சைக்குறிய வகையில் யாரும் சமூக வலைதளங்களில்
பதிவுகள் செய்ய கூடாது என அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கபட்டது.

4.திருநெல்வேலியில் நடைபெற போகும் பன்னாட்டு கம்பனிகளுக்கு
எதிராகவும், நம் இயற்கை வளங்களை காப்பாற்றவும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது.

5.கட்சியை மேலும் வலுபடுத்த தீவீர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

6.திருப்பூர் தெற்கு பகுதியில் கட்சி பணிகளுக்காக ஒரு அலுவலகம் அமைக்க
முயற்சிகள் எடுக்கமாறு தெற்கு நிர்வாகிகளை கேட்டுகொள்ளபட்டது.


கலந்து கொண்ட அனைவருக்கும் இணைச்செயலாளர் சரவணபிரகாஷ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.