2 அரசியல் அமைப்புசாரா சமூக நல் இயக்கங்களுக்கு - திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் கடிதம்

மேன்மைமிகு அன்பர்களுக்கு,

    இப்பவும் தங்களின் சங்கம் /அமைப்பின் வாயிலாக நல்லதொரு சேவையும், இடைவிடாத அர்ப்பணிப்புணர்வையும் கொண்டு சிறப்பாக செயல்படும் உங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

    அரசியல் ரீதியிலான மாபெரும் மாற்றத்திற்கான சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுத்து வளர்ந்து வருவது உங்களுக்கு தெரியும், அந்த வகையில் சமூக சிந்தனைகளையும், நவீன யுக்திகளையும் சுயநலமற்ற அரசியல் பார்வைகளையும், நடுநிலையான எண்ணங்களை செயல்படுத்தியும், ஊழலற்ற அரசாங்கத்தை வழிநடத்தி செல்வதில் ஆம் ஆத்மி கட்சியின் பணி இன்றியமையாதது.

      சாதி, மத, இன, மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை கடந்து மாபெரும் சமூக முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லும் ஆம் ஆத்மி கட்சிக்கு, நேரடி அரசியலில் ஈடுபட முடியாத பல தன்னார்வலர்கள் கூட தங்களால் இயன்ற வகையில் நமக்கு முதுகெழும்பாக, மூளையாக பணியாற்றி வருகிறார்கள்.


      அதுபோன்ற பொதுநல விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும், அரசியல் மாற்றத்தை விரும்புகிறவர்கள்  என்ற வகையில் உங்களது ஆதரவை வரவேற்கிறோம். அதுசமயம் தங்களது  மேலான ஆலோசனைகள்,, புதிய திட்டங்கள், சமூக வளர்ச்சிக்கான மாற்று சிந்தனைகள், சட்ட ரீதியான ஒத்துழைப்புகள், மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வகை உதவிகளை செய்வதன் மூலமாக ஆத் ஆத்மி கட்சியின் கரங்களை வலுபடுத்தவும் தங்களின்  ஆதரவை வேண்டுகிறோம்.

சமூக வளர்ச்சிப் பணியில்,

ஆம் ஆத்மி கட்சி
திருப்பூர் மாவட்ட தலைமை