0 ஒன்றுகூடுவோம் நெல்லையில்- தாமிரபரணியை நதியை காக்க போராடும் ஆம் ஆத்மி

தாமிரபரணி தண்ணீரை தாரைவார்க்கும் நெல்லை குளிர்பான ஆலைக்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டம்....
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித்தான் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல்சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துவரும் மழையினால் தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது.


இரண்டு மாவட்டங்களிலும் நடக்கவேண்டிய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக தவிப்பில் உள்ளனர். இந்தசூழலில்தான் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சுமார் 36 ஏக்கர் நிலம் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கேரள உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தை துவக்க ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்குள் வந்தது. ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்களுக்கு ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 37 பைசாவுக்கு வாங்கி, ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு ஏக்கர் நிலம் வெறும் ஏழு லட்சம் ரூபாய் வீதம் 36 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க தமிழக மக்களே திரண்டு வாரீர் . தாமிரபரணியையும், விவசாயத்தையும் , மக்களையும் காத்திட ஒன்று கூடுவோம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில். ஆம் ஆத்மி கட்சி, நெல்லை மாவட்டம்
மேலும் விவரங்களுக்கு: 82205 19052; 94896 21896

'தன்பொருநை' எனஅழைக்கப்படும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்  மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றி தூத்துக்குடி 
மாவட்டம்  புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. 

பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.


தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் சிறீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்த ஆறு  நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து ,விவசாயத்திற்க்கும் பயன்பட்டு வருகிறது.கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சுமார் 36 ஏக்கர் நிலம் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்டானில் ஏற்கனவே கோககோலா நிறுவனம் இங்கு துவக்கப்படும்போது பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதையும் மீறி நிறுவனம் துவக்கப்பட்டதுஅந்த நிறுவனம் சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செய்து தருவதாக உறுதியளித்த எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை.


கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தை துவக்க ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்குள் வந்ததுஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள்ஆனால் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டனர்
தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர்இந்த நிறுவனங்களுக்கு ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர்
அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 37 பைசாவுக்கு வாங்கிஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு ஏக்கர் நிலம் வெறும் ஏழு லட்சம் ரூபாய் வீதம் 36 ஏக்கர் நிலம் 95 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயம் பொய்த்துவிட்டதுகுடிநீருக்கு மக்கள் குடங்களை ஏந்தி அலைகிறார்கள்
அங்கு குளிர்பான ஆலை என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஆலையை துவக்க உள்ளார்கள்


இந்த திட்டத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும்கோக், பெப்சி நிறுவனங்களுக்கு போகத்தான் மீத தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படும் நிலை ஏற்படும்

மேலும் கோக் நிறுவனம் தண்ணீருக்காக செலுத்தவேண்டிய குறைந்த கட்டணத்தை கூட செலுத்தாமல் மோசடி செய்துவருவருகிறது. எனவே கங்கைகொண்டானில் மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மற்ற தொழில்களுக்கு அனுமதியளிக்கலாமே தவிர இத்தகைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது.

இது போன்ற மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மக்கள் நலன் விரும்பும் எவர் ஒருவரும் ஏற்று கொள்ள முடியாது...

மக்களை காப்பது தான் அரசின் வேலை... அதை விடுத்துஅடியோடு அழிக்கும் இந்த ஆலைகளை அனுமத்திக்க ஒருபோதும் ஒவ்வெரு ஆம் ஆத்மியின் 
தொண்டர்களும் விட மாட்டோம்...

புயலென புறப்படுவோம்...
தாமிரபரணி நோக்கி.....

நம் முன்னோர் நமக்காக விட்டு சென்ற நம் இயற்கை வளங்களை  நம் சந்ததியினருக்கு ...பாதுகாத்து வைப்போம் என்று சபதமேற்போம்...

நாள் 31.01.2015 பேரணி மதியம் 2 மணிக்கு... வண்ணாரபேட்டை செல்லாண்டியம்மன் சிலையில் இருந்து பேரணி புறப்படும்..

ஜவஹர் திடலில் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் ..

எங்களுடன் நீங்களும் இணையுங்கள்... ஜீவ நதி தாமிரபரணியை காப்பாற்றுவோம்..


இவண்..
திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி தொண்டர்கள்