0 டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஓராண்டு ஆட்சியின் சாதனைகள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஓராண்டு ஆட்சி
      
       இந்திய நாட்டின் 2 மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தி  மாபெரும் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. பெரும்பாலான மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு வைத்துக்கொண்டு பிஜேபியும் பிரதமரும் கடைக்கண் பார்வை வைத்தால்தான் மாநில அரசு செயல்பட முடியும். இல்லாவிட்டால் மாநில அரசின் செயல்பாட்டையே முடக்கி விடுவோம் என்று மத்திய அரசு, கவர்னர் மூலமும், காவல்துறை மூலமும் பல நெருக்கடிகளையும், ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடியை வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. ஆனால் மற்ற நிலங்களுக்கு கொடுப்பது போல் 40 சதவிகிதம் ரூ.52,000 கோடி நிதியை டெல்லி அரசுக்கு ஒதுக்காமல் வெறும் ரூ.325 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் ஏராளமான மக்கள் நல நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர். அவற்றின் முக்கியமானவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலற்ற மக்கள் நல ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியால் எல்லா மாநிலங்களிலும் நடத்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த பிரசுரத்தின் நோக்கம்.

ஆம் ஆத்மி கட்சி ஓராண்டில்
நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்கள்

--------------------------------------------------------------------------------------------------------------------
1.மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைப்பு, மின்கட்டண உயர்வு கிடையாது என்று 2011க்கு பிறகு 2015ல் முதன் முதலில் மின் துறை (DERC) அறிவிப்பு.
2.பேருந்து நிழற்குடை கூரைகளைப் பயன்படுத்தி சூரிய ஒளி மின்சார தயாரிப்பு திட்டம் அமல்.
3.ஐந்து ஆண்டுகளில் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் டெல்லி சோலார் எனர்ஜி கொள்கை "அறிவிப்பு".
4.டெல்லி தண்ணீர் வாரியத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், குடி நீர் தேக்கங்கள் , நிலங்கள் - கட்டிடங்கள் ஆகியவற்றின் கூரைகளை சோலார் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் வாரியத்தின் மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் திட்டம்.
5.முழுவதுமாக சூரிய ஒளி மற்றும் மாற்று சக்திகளின் மூலமாக செயல்படும் முதல் தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டம் திவிரம்.
6.மின்சாரம் தயாரிக்கும் 3 தனியார் கம்பெனிகளும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததையும், ரூ.8000 கோடி மின்சார கட்டணம் பாக்கி உள்ளதாக பொய்யான தகவல் கொடுத்ததையும் தணிக்கையாளர் அறிக்கை மூலம் டெல்லி அரசு அம்பலப்படுத்தியது.
7.நாளொன்றுக்கு 1500 KW மின்சாரம் உற்பத்தியாகும் வகையில் டெல்லி தண்ணீர் வாரியம் மூலமாக Bio-Gas ஆலைகள் அமைப்பு.
8.ஆம் ஆத்மி அரசின் மின்சார கொள்கையால் டெல்லி மக்களிடையே ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக செல்வாக்கு.
9."டெல்லி மாநிலத்தில் தண்ணீரைத் தனியார் மயமாக்கமாட்டோம்" என்ற அரசின் கொள்கை அறிவிப்பு.
10.ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் குடி நீர் இலவசம்.
11.அனுமதி பெறாத காலனிகளில் புதிய கழிவு நீர், தண்ணீர் குழாய் இணைப்புகளுக்கான கட்டணம் 80% குறைப்பு.
12.சிறிய கடைகளுக்கு தண்ணீர் கட்டணம குறைப்பு.
13.குடிநீர் வாரியத்தின் சேவைத் தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில் 'இந்த மாத சிறந்த ஊழியர்' விருது வழங்கும் திட்டம் அமலாக்கம்.
14.தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை சார்ந்திருக்காமல் இருக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கு ஊக்கம்.
15.மறு சுழற்சி மூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கிடைக்கும் தண்ணீரை தோட்டங்களுக்குப் பயன்படுத்தும் திட்டம் அமல்.
16.பட்ஜெட்டில் கல்விக்கு அதிக (2 மடங்கு) நிதி ஒதுக்கீடு..
17.அரசுப் பள்ளிகளைப் புதுப்பிக்க உடனடியாக ரூ.700 கோடு ஒதுக்கீடு.
18.2009 ஆண்டு உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில ஆலோசனைக் குழு அமைப்பு.
19.புதிய அரசுப் பள்ளிகள் கட்டும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது..
20.கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான நடைமுறைகள்.
21.12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மேற்படிப்பு படிக்க ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் - அரசு பொறுப்பேற்பு (Guarantee|).
22.நர்சரி பள்ளிகளில் பள்ளி நிர்வாக ஒதுக்கீடு (Management Quota) ஒழிப்பு.
23.கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களை வெளி நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது.
24.பள்ளிக்கூட மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுக்க விஷேச ஏற்பாடு.
25.டெல்லி பள்ளிக் கல்வி திருத்த சட்டம்-2015 மூலம் தன்னிச்சையாக கட்டணங்களை பள்ளிகள் உயர்த்துவதற்கு முடிவு. கட்டணங்களை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து முடிவெடுக்க பெற்றோர், நிபுணர்கள், பள்ளி நிர்வாகம் இணைந்த குழு.
.26.நர்சரி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர்களிடம் அல்லது குழந்தைகளிடம் Interview நடத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை.
27.கல்வித்துறையை மேம்படுத்த புதிய பள்ளிக்கட்டிடங்கள், சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள், முதல்வர்களுக்கு (Principal) கூடுதலான அதிகாரங்கள்.
28.டெல்லி அரசு ஒதுக்கிய நிலத்தில் nurseries, playschools, creches, and pre-primary schools நடத்துபவர்கள் 25% இடங்களை பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற திட்டம் கட்டாய அமலாக்கம்.
29.டெல்லியில் உள்ள 200 பள்ளிகளில் 8 வகையான விடுமுறைகால படிப்புகளுக்கான (beauty and wellness, automobile and travel and tourism, etc.) ஏற்பாடு.
30.கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உரிய இடங்களில் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்தப் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்படும் என்ற கறாரான உத்தரவை அமுலாக்கம்.
31.8ஆம் வகுப்பு வரை பாடத்திட்டன் (Syllabus) அளவு குறைப்பு.
32.பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர்களின் குழந்தைகள் நர்சரி பள்ளியில் சேரும் சமயத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவர்களுக்கு உதவிசெய்து வழிகாட்ட ஏற்பாடு.
33.பள்ளிகள் Capitation fee என்ற பெயரில் கட்டணம் வசூலித்ததால் பெறப்பட்ட தொகையைப்போல் 10 மடங்கு அபராதம்.
34.அதிகக் கட்டணம் வாங்கிய 400 தனியார் பள்ளிகள் 15 நாட்களுக்குள் அதைத் திருப்பி கொடுக்க நடவடிக்கை.
35.அரசு அங்கீகாரம் பெறாமல் தேவைகேற்ப இடமில்லாமல் கல்விபெறும் உரிமைச்சட்டத்தின்படி தரமான கல்வியை அளிக்காத 300 தனியார் பள்ளிகள் மூடல்.
36.பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள், சீருடை வழங்காத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து என்ற நடைமுறைத்திட்டம்.
37.நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க 'super talented children scholarship scheme' அமலாக்கம்.
38.அரசுப்பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகயருக்கு இலவச சிறப்பு பயிற்சி திட்டம் அமலாக்கம்.
39.பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், கட்டுப்படியான கட்டணத்தில் அனைவருக்கும் கல்வி கிடைத்திடவும் புதிய திட்டங்களை முடிவு செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் அரசு ஆலோசனை.
40.சுகாதாரத்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு: அரசு மருத்துவமனைகளில் 10,000 புதிய படுக்கைகள்.
41.அவசர சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.
42.ஏசி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் "ஆம் ஆத்மி மொகல்லா கிளினிக்" 1000 திறப்பு (ஒரு கிளினிக் அமைக்க செலவு ரூ.20 லட்சம்).
43.முக்கிய 100 மையங்களில் "ஆம் ஆத்மி பாலி கிளினிக்".
44.டெல்லியில் உள்ள 36 மருத்துவ மனைகளையும் 10 ஆயிரம் படுக்கைகளையும், 260 மருந்தகங்களையும் 45 நடமாடும் சுகாதார கிளினிக்குகளையும் இணைத்து மருத்துவ சேவையை சிறப்பாக வழங்கும் திட்டம் அமல்.
45.ஓராண்டிற்குள் கண், இருதயம், ஈரல் சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்கத் திட்டம்.
46.பிப்ரவரி-1 (2016) முதல் அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் இலவசம். பாலம் கட்டுவதில் மிச்சப்படுத்தப்பட்ட பணத்தை இதற்காக ஒதுக்கீடு.
47.டெல்லி குடிசைப்பகுதிகளுலும் ஜே ஜே காலனிகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதாரத்துறை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் குழந்தைகள் நலத்திட்டம் அமலாக்கம்.
48.டெல்லி மாநில அரசின் 11 மருத்துவமனைகள் நவீனமயமாக்கம்.
49.டெல்லியில் 37 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றில் புழு ஒழிக்கும் (de-worming) பிரம்மாண்டமான சுகாதாரத் திட்டம் அமல்.
50.110 ஆம்புலன்சுகளை வாங்கி மூன்று வகைகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் வீட்டிலிருந்து மருத்துவமனை வரை பாதுகாப்பு திட்டம் அமலாக்கம். 
51.டெங்கு காய்ச்சலைப் பயன்படுத்தி மருத்துவமனைகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு அதிக பட்ச கட்டணத்தை நிர்ணயித்து (டெங்கு டெஸ்ட் ரூ.600, checking platelet count ரூ.50)
52."தூய்மை டெல்லி" திட்டத்தின்படி டெல்லி நகரை சுத்தமாக வைத்திருக்க 3 மாநகராட்சிகளும் மேயர்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடு.
53.1000 ஏசி பேருந்துகள் உட்பட 10,000 புதிய - கூடுதலான பேருந்துகள்.
54.டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1084 கோடி, இதர போக்குவரத்துப் பணிகளுக்கு ரூ.3685 கோடி நிதி ஒதுக்கீடு.
55.ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்யும் திட்டம் அமலாக்கம்.
56.பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV)
57.பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க 20 அம்ச திட்டம் அமலாக்கம்.
58.நியாயமான கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு வசதியாக செல்போன் மூலம் ஆட்டோ, டாக்சிகளை பெறுவதற்கான ஏற்பாடு.
59.பயணிகளுக்கு வசதியாக டெல்லி மாநகரப் பேருந்துகளில் CCTV கேமராக்கள் மற்றும் wi-fi வசதி.
60.மாசுக்கட்டுப்பாட்டை நிலைநாட்ட ஒற்றை-இரட்டைப்படை கார் பயன்பாட்டு திட்டம் அமல். மக்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த 6000 கூடுதலான பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு. விதிகளை தளர்த்தி அதிகமான ஆட்டோக்கள் ஓடுவதற்கு ஏற்பாடு.
61.கடந்த 4 ஆண்டுகளைப்போல் டெல்லியில் காற்றின் தரம் 2015ல் மோசமாக இல்லை என்று டெல்லி 'மாசு கட்டுப்பாட்டுக் குழு' நீதிமன்றத்தில் அறிவிப்பு.
62.டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக செயல்படும் பணிமனைகளுக்கும் ஊழியர்களுக்கும் விருது வழங்கியதோடு போக்குவரத்து துறையில் பணிபுரியும் காண்ட்ராக்ட் ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
63.E-rickshaw திட்டத்தை ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆட்டோவுக்கும் ரூ.15000 மானிய உதவி.
64.ஒவ்வோராண்டும் ஏப்ரல்-1ந் தேதி ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணய கமிட்டி (fare fixation committee) அமைப்பு.
65.குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 1000 பேரின் லைசென்ஸ் பறிப்பு.
66.யமுனா நதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியுடன் இணைந்து 45 நாட்களில் யமுனா நதியை சுத்தப்படுத்தி புதுப்பிக்க திட்ட வரைவு இறுதிப்படுத்தப்பட்டது.
67.யமுனா நதியை 5 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி அதை படகு சவாரி மற்றும் சுற்றுலாத்தலமாக (picnic spot) மாற்றுவது. ஆற்றில் கலக்கும் மாசுக் கழிவுகளைக் கட்டுப்படுத்த 15 புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கும் திட்டப் பணிகள்.
68.யமுனா நதியை அசுத்தப்படுத்துபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கும் நடைமுறை.
69.டெல்லியில் முதன்முதலாக மாநில மனித உரிமைகள் கமிஷன் அமைப்பு.
70.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்குழு.
71.பெண்கள் உரிமைச் சட்டம் மூலம் டெல்லி பெண்கள் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம்.
72.பெண்களின் பாதுகாப்பு குறித்து நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை அமுல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை டெல்லி ஆம் ஆத்மி அரசு பெற்றது.
73.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு டெல்லி அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் டெல்லி போலீஸ் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்படும் வகையில் ஏற்பாடு.
74.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 20 புதிய துரித (fast track) நீதி மன்றங்கள் அமைப்பு.
75.அரசுப் பேருந்துகளில் பெண்கள் அச்சமின்றி பயணம் செய்ய பாதுகாவலர்கள் (marshall) ஏற்பாடு.
76.அமில வீச்சுக்கு ஆளான, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7.5. லட்சமாக உயர்வு.
77.அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா மருத்துவ மனைகளிலும் இலவசமாக முழு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும்.
78.சட்டமன்றத்தில் ஜனலோக்பால் சட்டத்தை நிறைவேற்றியது அன்னா ஹசாரே சொன்ன திருத்தங்களையும் சேர்த்து அதை இறுதிப்படுத்தியது.
79.பெரும்பாலான அரசு அலுவகங்களில் இலஞ்சம-ஊழல் கணிசமாக குறைந்துள்ளது.
80.பல்வேறு அரசுத் துறைகளிலும் காணப்படும் ஊழல் முறைகேடுகளைக் களைந்து டெல்லி மாநிலத்தை ஊழலற்றதாக மாற்றிட அதிகாரிகள் குழு.
81.காண்ட்ராக்டர்களிடம் கையூட்டு-இலஞ்சம் பெறுவதை ஒழித்திட எம்.எல்.ஏ.க்களுக்கு சராசரி வாழ்க்கைக்கு போதுமான கவுரமான சம்பளம்.
82.'கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நன்னடத்தையுடன் செயல்பட வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்களை சும்மா விடமாட்டோம்' என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறுவுறுத்தியது மட்டுமின்றி தனது அமைச்சரவையில் உணவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவரை ஊழல் புகார் காரணமாக பதவி நீக்கம் செய்து CBI விசாரணையை வலியுறுத்தினார். ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
83.திருமணத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினரோ உறவினர்களோ வரதட்சணை வாங்கக் கூடாது என்ற உறுதிமொழி ஏற்பு.
84.அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி அது செலவிடப்படும் முறை. செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றை on line மூலம் மக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிடும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலில் டெல்லியில் அமலாக்கம்.
85.ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான அதிகாரிகள் உடனடி பதவி நீக்கம்.
86.அரசுத்துறைகளிலிருந்து அனைத்து சான்றிதழ்களையும் ( திருமணப்பதிவு, வருமானம், சாதி, தேசியம், பிறப்பு, இறப்பு) பெறுவதற்கான கால அவகாசம் 60 நாட்களிலிருந்து 14 நாட்களாக குறைப்பு. அவற்றை இணையதளத்தி பெறுவதற்கான திட்டம் அமல்.
87.உரிய காலத்தில் அரசு வேலை முடிக்கப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி நட்ட ஈட்டை அளிக்க சட்டம்.
88.ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுத்திட எல்லாக் கடைகளும் கணினி மயம்.
89.வரி ஏய்ப்பைத் தடுக்க டெல்லி சுகம்-2 என்ற online form முறை அமலாக்கம்.
90.மூன்று மாநகராட்சிகளின் வரவு-செலவு கணக்குகளையும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் முறையாக தணிக்கை செய்ய நடவடிக்கை.
91.டெல்லி கிரிக்கெட் கழகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க நீதிபதி திரு.கோபால் சுப்ரமணியம் தலைமையில் விசாரணைக் கமிஷன்.
92.ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த போது நடைபெற்ற தண்ணீர் லாரி முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட ஷீலா தீட்சித் மற்றும் வாரிய உறுப்பினர்கள் மீது விசாரணை.
93.இதர பிற்படுத்தப்பட்ட சாதி கமிஷனில் நடந்த பலகோடி ரூபாய் மோசடியை கண்டுபிடித்து வெளியிட நம்பிக்கை.
94.ஊழலுக்கு எதிரான புகார்களை சொல்ல டெல்லி அரசு அறிவித்த 1031 என்ற சேவை எண்ணில் (Helpline) ஒரே நாளில் 12,731 அழைப்புகள்: ஒரு மாதத்தில் 1.25 அழைப்புகள். அந்த புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், பல்வேறு இலாக்கா அதிகாரிகள்\ஊழியர்கள் மீது நடவடிக்கை (கைது, சிறைத்தண்டனை, வேலை நீக்கம் உள்ளிட்டவை).
95.கலாம் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 5 மாதத்திற்குள் "அப்துல் கலாம் ஆராய்ச்சி மற்றும் அறிவு மையம்" அமைக்கும் திட்டம்.
96.அனைத்து உயரதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியும் திட்டம் அமலாக்கம்.
97.பொதுமக்களின் குறைபாடுகளை ஒரு வாரத்திலும் அவசரமான பிரச்சனைகளில் 48 மணி நேரத்திலும் நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு.
98.ரூ.247 கோடி மதிப்புள்ள 6 வழிப்பாலத்தை ரூ.142 கோடியில் மிகவும் தரமாகக் கட்டி முடித்து அரசுக்கு ரூ.105 கோடி நிதியை மிச்சப்படுத்தியது.
99.இன்னொரு பாலத்தையும் கட்டி அதில் திட்டச்செலவை ரூ.100 கோடி மிச்சப்படுத்தியது.
100.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்ததால் டெல்லியில் 36 மணி நேரம் கடுமையாக மழை பெய்த போதும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவே மழை நீர் தேங்கியது.
101.டெல்லி மாநிலத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பதில்லை என்ற அரசின் கொள்கை அறிவிப்பு.
102.டெல்லி மக்கள் அனைவரும் sim ஒன்றுக்கு மாதம் 1gb வரை இலவசமாக wifi வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் அமல்.
103.அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் - டெல்லி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV).
104.பொது இடங்களில் 2000க்கு மேற்பட்ட கழிப்பறைகள் (in JJ clusters).
105.சாலையில் போக்குவரத்து (19000 பேருக்கு) சிப்பி வீடு (shelter house)
106.சாமான்ய மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் சாப்பாடு கிடைக்கும் வகையில் jan aahar கடைகள் மூலம் 'Aam aadmi meal' திட்டம் அமலாக்கம். மக்களிடம் பெரும் வரவேற்பு.
107.2 மாதங்க்களில் ஆம் ஆத்மி கேண்டீன்களை ஏற்படுத்தும் திட்டம்.
108.மாநில அரசின் கீழ் வரும் அனைத்து சாலைகளிலும் முறையான பழுது போக்கும் பணிகள்.
109.சான்றிதழ்களில் அவரவர் சான்றொப்பம் (self attestation) போதும்; சுய பிரமாணப்பத்திரம் (self affidavit) on line மூலம் அளிக்கலாம் என்ற திட்டம். இதனால் அரசு அதிகாரிகளையும், Notary public களையும் தேடி அலைவதும் attestation க்கு பணம் கொடுப்பதும் அவசியமில்லை என்ற நிலை.
110.RTI விண்ணப்பங்களை online மூலம் பெற்று நடவடிக்கை எடுக்கும் திட்டம்.
111.திருமணப் பதிவு செலவுகளை 90% குறைக்கும் வகையில் tatkal service கட்டணம் கடுமையாகக் குறைப்பு.
112.புதிய குடிசை மாற்று வாரிய திட்டங்கள்.
113.மாசுக்கட்டுப்பாட்டை அமலாக்க தீவிரமான - சமரசமற்ற நடவடிக்கைகள்.
114.பொதுமக்களிடமும் புகையிலைப் பொருட்களை விற்பவர்களிடமும் புகையிலைப் பொருட்களால் வரும் விளைவுகளைப் பற்றிய தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம்.
115.டெங்கு காய்ச்சல் தடுப்பு, மாசுக்கட்டுப்பாடு போன்ற மக்களுக்கு நலன் பயக்கும் பல திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலம் பிரச்சாரம்.
116.தெரு விளக்குகளில் Led பல்புகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கல்.
117.மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஏற்றிச்செல்லவும் இறக்கிவிடவும் வாகனச் செலவுக்கு ரூ.1.52 கோடி ஒதுக்கீடு.
118.டெல்லி அரசு ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு திட்டம் மூலம் முதல் நாளே மாற்றுத்திறனாளிகள் 142 பேருக்கு பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலை.
119.பாத்திரங்கள், மர-மூங்கில் சாமான்கள் ஆவவற்றிற்கு மதிப்பூட்டல் வரியை வரியை 7% குறைத்து மக்களுக்கு குறைந்த விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
120.டெல்லியில் 2015-2016ல் 14 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மாநகரத்தை பசுமை மயமாக்கும் திசையில் நடவடிக்கைகள்.
121.40 ஆண்டுகளுக்கு முன்பு எமெர்ஜென்சி காலத்தில் இடிக்கப்பட்ட சிறுபான்மையினர் பள்ளி திரும்பக் கட்டித் தரப்பட்டது.
122.விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கி மக்களுக்கு சந்தை விலையைவிட குறைவாகக் கொடுக்கும் நடவடிக்கை.
123.மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் நட்ட ஈடு.
124.1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.130 கோடி நட்ட ஈடு.
125.என்கவுண்டரில் மரணமடையும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நட்ட ஈடு.
126.1948ஆம் ஆண்டின் குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம்; குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைப்பு (உயர்வு). குறைந்த பட்ச ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் சேர்ப்பு.
127.கட்டிடத் தொழிலாளர்களின் குறைந்த பட்ச கூலியை மாற்றியமைக்க நடவடிக்கை.
128.காண்ட்ராக்ட் ஊழியர் நியமனம் பற்றிய புதிய சட்டம். எந்தத் துறையிலும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று அரசு உத்தரவு.
129.50,000 காண்ட்ராக்ட் ஊழியர்களை முன்னுரிமை அடிப்படையில் அரசுப்பணி காலியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை.
130.கழிவுப் பொருட்களை கண்ட இடங்களில் எரிக்கும் நபர்களுக்கு ரூ.5000 அபராதம்.
131.தூசிக்கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு ரூ.50,000 ஆகும்.
132.எல்லா உணவகங்களும் உணவுப்பாதுகாப்பு லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
133.உணவுப்பொருட்களில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள்..