1 தேசத்தை அவமதித்தவர்களே வெட்கப்பட வேண்டும்- பதில் கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஐ வேதனைப்படுத்த வேண்டி அவர் அணிந்திருக்கும் காலணி மிகவும் அழுக்காக இருப்பதாகவும், அதனை அணிந்து கொண்டு உயர்பதவியில் இருக்கும் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அதைப் பார்க்கும் போது மிகவும் தனக்கு மன வருத்தம் தருவதாகவும் கூறியுள்ளார் விசாகப்பட்டினம் பொறியாளர் அகர்வால், அதற்காக வசதியான அந்த தொழிலதிபர் ஊரில் அனைவரிடமும் கையேந்தி சேகரித்து ரூபாய் 364/-  க்கான காசோலையை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் அவர் ஒரு நல்ல காலணி வாங்கிக் கொள்ளவும் அதனுடன் இணைத்துள்ள கடிதத்தில் அகர்வால் எழுதியிருந்தார்.

மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்ட முதல்வர் கேஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார் இப்படி.
என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு எனக்கு நீங்கள் அனுப்பிய காசோலையை பெற்றுக் கொண்டேன் மிக்க நன்றி. இன்றைய நிலவரத்தில் இந்தியப் பணத்தின் மதிப்பு உலக நாணய மதிப்பீட்டில் மிகக் கேவலமாக குறைந்து விட்டதும், உங்களின் அன்புக்குரியவரின் ஆட்சியில் விலைவாசி ஐந்து மடங்கு வரை சட்டென உயர்ந்து விட்டதாலும், நீங்கள் அனுப்பிய அந்த மிகக் குறைவான தொகைக்கு மிக மலிவான தரமேயில்லாத ஒரு காலணி தான் என்னால் வாங்க முடிந்தது.

இந்தியாவின் மிக உயரிய பதவியிலுள்ள பிரதமர் அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தில் 63 %  மக்கள் அடிப்படை சுகாதார வசதியில்லாமல் வீதிகளிலும் திறந்த வெளிகளிலும் மலஜலம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். நம் தேசத்தில் நாற்பது சதவீத மக்கள் உணவும் உடையும் உறையுளும் இல்லாமல் வறுமையில் உழல்கின்றனர். ஒரு நாள் பாக்கியில்லாமல் தினம் தினம் பிழைக்க நாதியில்லாமல் இவ்வாட்சியில் கார்ப்பரேட்டுக்கு சந்தை மயமாக்கப்பட்ட விவசாயத்தால் நலிவுற்ற விவசாயிகள், தற்கொலை செய்து செத்துக் கொண்டிருக்கின்றனர். உலகமே நம்மை கேவலமாக பார்க்கிறது. இந்தியாவின் கண்ணியமிக்க பொறுப்பிலுள்ள பிரதிநிதி தேசிய கீதம் இசைக்கையில் நடந்து சென்று நாட்டுக்கொடியை அவமதிக்கும் அவரையும் நினைத்து நீங்கள் கொஞ்சம் வெட்கப்பட வேண்டி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என எழுதியிருக்கிறார்.