0 அவிநாசி - அத்திகடவு போராட்ட களத்தில் ஆம் ஆத்மி கட்சி

அத்திகடவு - அவிநாசி போராட்டம் பற்றியும் ...
திட்டத்தை பற்றி விரிவான விளக்கமும்...
இந்த லிங்கில் பார்க்கலாம் ...

இந்தபதிவு....
போராட்டகளத்தில் திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி பற்றியது..

சமூக ஆர்வலர்கள் 8.1.2016 முதல் காலவரையற்ற
பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில்
மாவட்ட , சட்டமன்ற பொருப்பாளர்கள் இன்று ( 11.02.2015)
உண்ணாவிரத பந்தலுக்கு சென்று ஆதரவு தெரிவித்து உண்ணாநிலை
மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு நாட்களாக உண்ணாநிலை இருக்கும் நண்பர்களை அதிகம்
சிரமபடுத்த கூடாதென்பதாலும் அவர்களின் உடல் நிலையை
கருத்தில்கொண்டும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வடக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மட்டுமே அருகில் சென்று ஆம் ஆத்மியின் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் அவிநாசி அத்திகடவு போராட்டத்தில் இதற்கு முன்
ஆம் ஆத்மியின் செயல்பாடுகள். போராட்டங்கள்...
என்றும் மக்கள் பணியில் ..
எஸ்.சரவணபிரகாஷ்,
மாவட்ட இணைச்செயலாளர்,
ஆம் ஆத்மி கட்சி, திருப்பூர்.