0 சோற்றில் மண் அள்ளி போடும் - கெயில்

தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை 
செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
மேலும் கெயில் எரிவாயு திட்டத்தை எதிர்த்து 
தமிழக அரசு தாக்கல் செய்ய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாயை பதிக்க 
எந்தவித தடையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், 
எரிவாயு குழாயை பதிக்கும் பாதையை மாற்றி அமைக்க 
தமிழக அரசிற்கு எந்தவித உரிமையும் கிடையாது என 
திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டு 
விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் 
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட போதே எதிர்க்காதது ஏன்?
கெயில் எரிவாயு திட்டம் வரையறுக்கப்பட்ட போதே 
தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள 
உச்சநீதிமன்றம் தமிழக அரசு வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு 
தற்போது செயல்படுகிறதா எனவும் வினா எழுப்பியுள்ளது.

கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக 
மங்களூருக்கு எரிவாயு குழாயை பதிக்க 
கெயில் எரிவாயு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 
மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
.....
நீதிமன்றமே .....தீர்ப்பை மாற்று
மக்களுக்காகத்தான் நீதி..... கம்பெனிகளுக்கு அல்ல ....
மக்களுக்காகத்தான் அரசுகள்.....
மக்களுக்குக்காகத்தான் சட்டங்கள்....
உணவு வழங்கும் விவசாய நிலத்தில் 
குழாயை பதித்து விட்டு சாப்பிட என்ன எரிவாயுவும் , எண்ணையுமா ???

உணவு வழங்கும் விவசாயியின் நிலம் என்ன 
நீங்கள் கட்டி இருக்கும் கட்டிடடமா? 
வேறு இடத்தில் சென்று கட்டிக்கொள்ள..???

விவசாயிகளின் வயிற்றில் அடித்துதான் 
உங்கள் நீதியை காப்பாற்ற வேண்டுமெனில் அப்படி ஒரு தீர்ப்பே வேண்டாமே....
உடனடியாக இந்த தீர்ப்பை வாபஸ்பெற வேண்டும்.....
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பாகும், 
இழப்பீடு அதிகம் கொடுத்து விட்டால் 
அடங்கி விடுவான் என்று நினைக்கிறதா நீதிபதியும், கம்பனிகளும்,

நெடுஞ்சாலைகளின் ஓரம் இந்த திட்டத்தை அமுல் படுத்துவதில் 
என்ன சிக்கல் இந்த நிறுவனத்திற்க்கு ...
லஞ்சம் வாங்கிக்கொண்டு இதற்க்கு அனுமதி அளித்த 
இந்நாள் முன்னாள் அரசியல்வியாதிகளே வாருங்கள் எங்கே சென்றுள்ளீர்கள்.
மக்கள் விரோத தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி வன்மையாக கண்டிக்கிறது..

இவண்..