2 தமிழகத்தின் முதுகெலும்பை முறிக்கும் கெயில் எரிவாயுகுழாய் போராட்டம்


தமிழகத்தில் முதுகெலும்பை முறிக்கும் கெயில் எரிவாயுகுழாய்  போராட்டம்

கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எரிவாயு குழாய்கள் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களின் வழியாக கொண்டு போகப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான கெயில் இந்த குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.கெயில் எரிவாயு.???

கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு கொண்டு செல்லும் எரிவாயுகுழாய்
கேரளாவில் தேசியநெடிஞ்சாலை ஓரமாக செல்கிறது, கர்நாடகாவில் தேசியநெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது, தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலத்தில் செல்கிறது.  

இதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை. பைப்லைன் பதித்த நிலத்தில் இருபுறமும் 30 அடிக்கு விவசாயம் செய்யவோ கட்டிடம் எழுப்பவோ கூடாது.,

பைப் பதித்திருக்கும் நிலத்தில் இரும்பு கம்பி, மண்வெட்டி கொண்டு வேலை செய்தால் அருகிலிருக்கும் நிலத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும்.,

நமக்கு வேண்டாதவர்கள் யாராவது வேண்டுமென்றே நமக்கு தெரியாமல் செய்தாலும் நாம்தான் பலிகடா.

இது தமிழத்தில் ஏழு மாவட்டத்தை கடந்து செல்கிறது, இதற்காக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படுகிறது..

எரிவாயு கொடுப்பது கேரளா வாங்குவது கர்நாடகா, தமிழ்நாட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் பாதிப்பு மொத்தமும் தமிழ்நாட்டுக்கு. இந்த திட்டத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது கொங்கு மண்டலம் தான். 

முதலில் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்த தமிழக அரசு, பின் தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளது