2 மோடியின் கோவை வருகை..

பாரத பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடு சுற்றுவதைபோல கோவைக்கும் இரண்டாவது முறையாக விஜயம் செய்தார். ஒரு மருத்துவமனையை திறந்து வைக்க மோடியா என்று விழிபிதுங்கும் அளவிற்கு இந்த நிகழ்வை அரசியலாக ஆக்குகின்றது தமிழகத்தில் போணியாகாத பாஜக. இதே மருத்துவமனையில் உள்ள 

மருத்துவக்கல்லூரியை  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூடிவிட எத்தனித்த பொழுது கண்டு கொள்ளாத மத்தியில் ஆளும் பாஜக இப்பொழுது இதன்மேல் பாசம் காட்டுவது நகைப்பிற்குரியது. 
கடந்த சில நாட்களாகவே திரைமறைவு அரசியல் நாடகங்கள் கூட்டணி என்ற பெயரில் அரங்கேறிகொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாகவே தனது பலம் என்ன என்பதை உதிரி கட்சிகளுக்கு எடுத்துக் கூற இந்த தளத்தைப்பயன்படுத்தி கொண்டுள்ளது மாநில பாஜக. தமிழகத்தில் மீனவனும், விவசாயியும் வாழ வழியின்றி தினம் தினம் செத்து மடிகின்ற வேளையில் , அதற்க்கு ஒரு தீர்வை தரமுடியாமல் தோற்றுப்போன மோடி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தொழிலதிபர்களை  சந்தித்து உரையாடல் செய்கிறார். ஆனால் இங்குள்ள பிரச்சினைகளோ விசைத்தறியாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பானது. அத்திக்கடவு கூடுநீர், கௌசிகா நதி பிரச்சினை மற்றும் சாய கழிவுகளால் நிலமும், நீரும், மனிதமும் பாழ்பட்டு கிடக்கையில் விளிம்புநிலை மக்களை சந்திக்காமல் வழக்கம்போல தொழிலதிபர்களை சந்தித்துள்ளார் தொழிலதிபர் மோடி அவர்கள்.

இவரின் இன்றைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி சுமார் 200 பேர்கள் கைதானார்கள் . இவரின் வருகையால் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்[பட்ட காவல்துறையினர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாயினர், அதேபோல் பொதுமக்களும் இவரின் வருகையை கொண்டாடவில்லை , எப்பொழுது இந்த இடத்தை விட்டு காலிசெய்வார் என்ற மனநிலையை காண முடிந்தது, காரணம் போக்குவரத்து மாற்றம், கடும் வாகன சோதனை என்று சொல்லொணா இன்னல்களுக்கு உள்ளாயினர் நகர வாசிகள் மட்டுமன்றி வெளி ஊர்களில் இருந்து கோவைக்கு வரும் மக்களும். இதனால் கோவைக்கும் கோவை மக்களுக்கும் எந்த வித பயனும் இல்லை. பாஜகவினருக்கு மட்டும் தேர்தல் நாடகத்திற்கு ஒரு ஒத்திகை பார்க்கவே இது பயன்பெற்றது