0 3-ல் 2 பங்கு கச்சா எண்ணையால் உண்மையில் மக்களுக்கு பலன் இல்லை- மோடி அரசின் முகமூடி

இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான “அட்னாக்” ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது.அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். அவ்வாறாக, அமீரகத்தின்  தேசிய எண்ணெ நிறுவனமான அட்னாக் (அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பரேஷன்), இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா அவசரகாலத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
இந்தியாவைப் பொறுத்தவரையில் 79% அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதை சேமித்து வைக்கப்பதற்காக பாதாள சேமிப்பு கிடங்குகள் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூர், படூரில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும். இதில் மங்களூர் சேமிப்பு கிடங்கில் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை தன்னுடைய வர்த்தக பயன்பாட்டுக்காக சேமித்து வைக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அப்படி சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா அவசர தேவைகளுக்கு 3-ல் 2 பங்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அமீரக எண்ணெய் நிறுவனமான அட்னாக் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.இதேபோல் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது. என்றெல்லாம் மக்களுக்கு கண்துடைப்பு காட்டிவிட்டு உண்மையில் மோடியின் சாதனை என பிதற்றிகொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் கூற்றுக்கு முற்றுபுள்ளிவைக்கும் பதிவு இது.

1 --- ஆழ்துளை கச்சா எண்ணெய்க்கிணற்றில் இருந்து அதிக அழுத்தத்துடன் பீறிட்டு வெளியேறும் கச்சா எண்ணெய் உற்பத்தியை #அட்னாக் நிறுவனத்தினால் நிறுத்தி வைக்க இயலவில்லை. (உற்பத்தியை நிறுத்திவிட்டு ஊழியர்களுக்கு வெட்டியாய் ஊதியம் தருதல் நஷ்டம். தராமல் holiday / lay off விட்டாலும் எல்லாரும் வேறு கம்பெனிக்கு ஓடி விடுவார்கள்)

2 --- எனவே, அப்படி கிடைக்கும் கச்சா எண்ணையை சேமித்து வைக்கக்கூடிய அணைத்து டேங்க்களும் அபுதாபியில் #நிரம்பி விட்டன.

3 --- தற்சமயம் கச்சா எண்ணெய் மிகவும் #விலைமலிந்து விட்டதால் இப்போது கச்சா எண்ணையை விற்பது அட்னாக் கம்பெனிக்கு இலாபம் தராது. நஷ்டமும் தரலாம்.

4 --- ஆகவே, தம்மிடம் சேமித்து வைக்க இடமில்லாததால்... விலை மலிவாக கிடைக்கும் இந்திய சேமிப்புக்கிடங்கை வாடகைக்கு (அதாவது, '#அவசரதேவைக்கு'(!?) 2/3 அளவுக்கு கச்சாஎண்ணெய் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் போட்டு) எடுக்கிறது.

5 --- கச்சா எண்ணெய் என்பதால்... அதை நானோ நீங்களோ பொதுமக்களோ பயன்படுத்த இயலாது. ரிலையன்ஸ், ஐஓசி, பிபிசிஎல் போன்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் (#ரீபைனரீஸ்) தான் போட்டி போட்டு இலவசமாக எடுத்து பயன்படுத்தும்.

6 --- அந்த கச்சா எண்ணையை சுத்திகரித்து பண்படுத்தி... பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, மெழுகு, தார் என எல்லாம் பிரித்து எடுத்து அனைத்தையும் #மார்க்கெட்ரேட்டுக்கே விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கும். நிச்சயமாக விலையை குறைத்தெல்லாம் விற்காது என்பதை நான் எப்படி நம்புகிறேன் எனில்... கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஐந்து மடங்கு குறைந்தும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஒரு மடங்கு கூட குறையாததுதான் நம் கண்முன் நிற்கும் சாட்சி...! ஆகவே,  அந்த இலவச கச்சா எண்ணையால் பொது மக்களுக்கு ஒரு பயனும் இருக்காது. மாறாக... எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே இலாபம் அளிக்கும்.

7 --- அபுதாபிக்கு தெரிந்து இருக்கிறது. இப்போது...பீப்பாய் 25$ க்கு மதிப்புள்ள கச்சா எண்ணையை, மூன்றில் இரண்டு பங்கை இலவசமாய் அதாவது வாடகையாய் எடுக்க சொல்லிவிட்டு, மீதி ஒருபங்கு கச்சா எண்ணையை ஸ்டோர் பண்ணிவிட்டு... தனது பங்கான அந்த... மூன்றில் ஒரு பங்கை... பிற்காலத்தில்... கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 75$ வரும்போது இந்திய அரசிடம் (இன்னைய ரேட்டுக்கு அதை நீயே வச்சிக்கப்பா) #விற்று இப்போது இழந்ததை... பின்னர் சரிகட்டிக்கொள்ளலாம் என்றும், இந்த டீலிங் நஷ்டம் இல்லை என்றும்... நன்கு புரிந்திருக்கிறது.

8 --- அதைவிட... இன்னொன்றும் அபுதாபிக்கு தெரிந்து இருக்கிறது. இந்திய ரீபைனரீஸ்... மூன்றில் இரண்டு பாகத்தை சுத்திகரித்து இலவச இலக்கை முழுதாக எட்டுவதுக்குள்... கூடிய சீக்கிரம்... குருட்ஆயில் ப்ரைஸ் (கச்சாஎண்ணெய் விலை) பழையபடி பீப்பாய் $90 டாலரை நெருங்கிவிடலாம் என்று. எனவே... அந்த நேரத்தில்.. மங்களூரில் #பாதிடேங்க் பாக்கி இருந்தாலும்... "இந்தியாவின் அவசரத்தேவை முடிந்துவிட்டது எனக்கூறி" அபுதாபி அதனை மீட்டுக்கொண்டால்... இன்னும் #செமைலாபம்தான். கணக்கு எப்பூடி..?!

9 --- இப்படியாக பொதுமக்களுக்கு எவ்வகையிலும் இலாபம் இல்லாத இந்த டீலிங்கால்.... மோடியின் எண்ணெய் நிறுவன #நண்பர்களுக்குத்தான் செமை இலாபம்..! அதில்... அம்பானி மட்டுமின்றி... அட்னாக் என்ற புதிய எண்ணெய் நண்பனும் உண்டு..!

10 --- ஆகவே... அது #இலவசமில்லை. குரூட் ஆயில் ஸ்டோர் பண்ணி வைக்க... இந்தியாவுக்கு அட்னாக் தர வேண்டிய #வாடகை... அந்த வாடகை... இந்திய மக்களுக்கு வராமல்... எண்ணெய் நிறுவனங்களுக்கு இலாபமாய் போகப்போகிறது...! அதில் ஒரு பகுதி... வழக்கம்போலவே ஆளும் கட்சியின் தேர்தல் நிதியாக திரும்பவும் வாய்ப்புள்ளது. அவ்ளோதான் இதில் மேட்டர்.