0 2000 ஆயிரம் தாளால் உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அடையுமா?

2000 ஆயிரம் தாளால் உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அடையுமா?

நிச்சயம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட மாற்றம் இருக்கப்போகிறது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்பதை குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கழிந்தால் தான் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், எனது பார்வையில் இரண்டுவிதமான பின்னடைவை சாதாரன நடுத்தரவர்க்கம் சந்திக்க இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

முதலில் சாதகம் என்ன என்றால் 500 கோடியை கூட, இரண்டு சூட்கேசில் தினித்து அசால்டாக டிரான்ஸ்போர்ட் செய்யலாம். மற்றும் ரூபாய் தாள்களின் தயாரிப்பு செலவு குறிப்பிடதக்க வகையில் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் தான் சாதகமா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கட்டும்.

சரி பாதகமாக பயமுறுத்தும் காரணங்களை பார்ப்போம்.


1.முதலில் 2000 ரூ நோட்டு பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் கைகளில் தான் புரளபோகிறது. இனி எலக்சன் டியூட்டிகளிலும், கஸ்டம் டியூட்டிகளலும் அதிகப்படியான பண புழக்கத்தை கட்டுபடுத்த புதிய செக்யூரிட்டி முறைகளை தேடி ஓடும் அதிகாரிகளை நினைத்து பார்க்க வருத்தமாகவும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.

அதேபோல் பதுக்கலுக்களுக்காக டாலரையும், கோல்டையும், லேண்டையும் தேட வேண்டியிருக்காதோ என தோன்றுகிறது. 5000, 10000 ரூ தாள்கள் நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியாதவர்களுக்கு இதன் பிண்ணனி தெரிய வாய்ப்பில்லை.

2.சிறு வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேருந்துகளில் பெரும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனை வரும். அதன் நிறுவனர்கள் முன்கூட்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். சாதரணமாக நால் ஒன்றுக்கு 10 பேர் 2000 ரூ தாளை நீட்டினாலும் குறைந்தபட்ச இருப்பாக கல்லா பெட்டியில் 20,000ரூ வைத்திருக்க வேண்டும். அது குறு, சிறு, பிளாட்பார, நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்துமோ என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

3.மிக முக்கியமான விசயம் என்னவென்றால் 2016 ஆன இன்றைய நாளிலிருந்து "அடுத்த மூன்று வருடங்களில் மக்களின் மிகை நுகர்வு கலாச்சாரம் வெகு வேகமாக பரவும்". ஆன்லைன் சாப்பிங்களும், பெரிய சூப்பர்மார்கெட்களும், கார், மின்னனு, ஜிவல்லரி ஸோரூம்களும் அதிகளவில் தோன்றி மக்களின் உழைப்பை போதும் போதும் என்ற அளவிற்கு சுரண்டி தங்கள் வயிற்றை வளர்க்கும்.

மிகை நுகர்வு கலாச்சாரம் -

அப்படியென்ன அபத்து இதில் இருக்கிறது என்பதை கொஞ்சம் கவனாக புரிந்துகொள்ளுங்கள். பொதுவாக நம் தேவைக்காக ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்குவதற்காக நம்ம தெருமுனை அண்ணாச்சிகடைல வாங்கும் போது பெரிய அளவில் மனதில் ஒன்றும் தோன்றாது. ஆனால், அதே ஒரு கிலோ பாசிப்பருப்பை ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்காக நாம் செல்வோமேயானால், முதலில் உள்ளே நுழைந்ததும் பெப்சிக்கோ, கோக்கிற்கோ ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று குவித்து வைத்திருக்கும் பாட்டில்களை பார்த்ததும் உடனே மனசுக்குள் இருக்கும் அவசர புத்தி நம்மை அந்த பாட்டிலை வாங்க வைத்துவிடும். அதுபோலவே பருப்பை தேடும் நேரத்தில் குறைந்தது மூன்று இதர பொருட்களையிம் வாங்கி நம் பேஸ்கட்டில் போட்டு விடுவோம். வெறும் கைகளால் பொருட்களை எடுக்கும் போது நாம் அதிக எண்ணிக்கையில் எடுக்க மாட்டோம். ஆனால், ஒரு பேஸ்கட் கையில் இருந்தால் பார்ப்பதையெல்லாம் எடுத்து அதில் போட்டுக்கொண்டு பில் கவுண்டருக்கு செல்வோம் என்ற யுக்தியையே பெரும் நிறுவனங்கள்  வெகு காலமாக கையாண்டு வருகிறது.

ஆக, ஒரு கிலோ பருப்பு வாங்க சென்ற நாம் கூடவே நன்கு பொருட்களையும் சேர்த்து பில் அழுது வாங்கி வருகிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நான்கில் மூன்று பொருட்களை நாம் போதுமான அளவு பயன்படுத்தாமல் வீனாய் இடத்தை அடைத்து வைக்க போகிறோம்.

இதே யுக்தியை தான் ஆன்லைனில் பெண்டிரைவ் வாங்க சொடுக்கினால் 5400 ரூக்கு கூடுதலாக டச் மொபைல் போனையும் ஆர்டர் செய்து விடுகிறோம். மனோவியல் ரீதியாக இது எதார்த்த உண்மை என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி இது வெறும் ஆயிரம், ஐநூறில் மட்டுமா என்றால் கொஞ்சம் உங்கள் வீட்டின் ஹாலில் சுற்றி பாருங்கள் 23,000 ரூபாய்க்கு சோபாவும், 45,000ரூபாய்க்கு டீவியும், பெட்ரூமில் 35,000 ரூபாய் கட்டில், டைனிங் டேபில் இன்னும் இனைப்பிகளாய் டேபில் மேட்டிலிருந்து தொப்பையை குறைக்கும் ரன்னர் வரைக்கும் கன்னதையும் சகட்டுமேனிக்கு வாங்கி குவித்திருப்பதை காணுங்கள். நிஜமாலும் இத்தகைய பொருட்கள் அனைத்தும் இவ்வளவு விலையில் நாம் கண்டிப்பாக வாங்கிதான் ஆக வேண்டுமா?

கார் வாங்கனுமா? மிக குறைந்த டவுன் பேமென் வெறும் 20,000 கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வரந்தாவில் கொண்டு போய்விடலாம். இனி மாதா மாதம் லோன் டியூ கட்டனும் என்பதை அந்த சில நிமிடங்களில் யோசிக்காமல் வாங்கி சிக்கி தினறி சீரளிபவர்களே அனேகம் பேர்.

இவ்வாறு உண்மையான தேவைக்கு என்றில்லாமல் சகட்டு மேனிக்கு பொருட்களை வாங்கி தினிப்பதையே மிகை நுகர்வு என்கின்றார்கள்.

சரி, 2000 ரூ நோட்டு வெளியிட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா?? வருகிறேன் பொருங்கள்.

பொதுவாக மால்களிலும், ஆன்லைனிலும் பொருட்களை சகட்டு மேனிக்கு வாங்குபவர்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். கையில் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எண்ணி கொடுப்பதற்கும் ஆன்லைனில் கார்டுகளை சுவேச் பன்னி பணம் செலுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதில் எவ்வளவு தொகையை செலுத்தினாலும் அங்கலாப்போ அல்லது சுய முன் ஜாக்கிரதை உணர்வுகளோ தூண்டப்படுவது இல்லை என்பதே மன-உடல் ரீதியான சித்தாந்தங்கள் ஆகும்

டெல்லி, மும்பை, பெங்கலூரு நகரங்களில் வசிக்கும் உங்கள் சக நண்பர்களின் வாழ்க்கை முறைக்கு கொஞ்சம் உங்கள் புத்தியை கொண்டு சென்று வாருங்கள். நிலைமை எவ்வளவு வேகமாக உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது என்பது புரிய வரும்.

ஆக, கையில் ரொக்கமாக வைத்து செலவு செய்வதற்கும் மாறாக மின்னனு டிரன்சேக்சன் செலவு செய்வதற்குமான வித்யாசத்தை பெரு முதலாளிகள் கண்டறிந்து தங்கள் யுக்திகளால் பெரும் இலாபம் அடைகின்றார்கள்.

பெரும்பாலும் இத்தகைய கிரெடிட் கார்டு செலவுகளில் ஐ.டி. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிந்த "இளசுகளின் சீரளிவு கதைகளை 2010 - 13 ஆண்டுகளில் வாசித்திருப்பீர்கள். அதேபோல ஒரு நிலைமையை சாமானியன் கையில் இருக்கும் இந்த 2000 ரூபாய் தாளும் ஏற்படுத்தும்." என்பதே மக்களின் பயத்திற்கு காரணம்.  ஏநெனில் அரசு அனைத்து பண பரிமாற்றங்களையும் இவ்வாறே செய்ய அறிவுறுத்துகிறது.

வெறும் ஐந்து 2000 ரூபாய் தாள்களை ஸ்டைலாக நீட்டி பொருட்கள் வாங்குவதற்கும் 100 நூறு ரூபாய் தாள்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படியாக அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கும்படியான மிகை நுகர்வு கலாச்சாரத்தை அரசு ஊக்குவிக்குமேயானால் பெரும் பொருளாதார சீரளி ஏற்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் இது தொடருமேயானால் 80 லட்சம் ரூபாய் 1 கோடி ரூபாய் கார்கள் சாலைகளில் அனாயசமாக ஓடுவதை காண முடியும். மக்கள் அதிக அளவில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்கள். இப்படி ஆடம்பரப்பொருட்களின் விற்பனை மேலோங்கும்போது சத்தமே இல்லாமல் அடிப்படை பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிடக்கூடும். அப்போது எவ்வளவு வேகமாக பொருட்களை வாங்கி குவித்தார்களோ அதைவிட அதிக கஸ்டங்களை சாமானிய மக்களின் தலையில் தூக்கி வைப்பார்கள்.


இப்படி இதுவும் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது என்பதைஉன்கூட்டியே உணர்ந்து அரசு செயல்பட்டால் அதை கை தட்டி வரவேற்போம்.

பாரத பிரதமர் மோடி பெரும் துணிச்சல்காரர் என்பதை நிறுபித்துவிட்டார். புத்திசாளி என்பதையும் விரைவில் நிறுபிப்பார் என்ற ஆவலுடன் சானியன்.